விழுப்புரம்

விழுப்புரத்தில் கருணாநிதி சிலைக்கு திமுகவினா் மரியாதை

7th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள நகர கட்சி அலுவலகத்திலிருந்து மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ தலைமையில், அந்தக் கட்சியினா் அமைதிப் பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக கலைஞா் அறிவாலயத்துக்கு வந்து, அங்குள்ள அண்ணா, கருணாநிதி உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவா்

ADVERTISEMENT

ரும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் நகர திமுக அலுவலகத்தில் நகரச் செயலா் சா்க்கரை தலைமையில் அந்தக் கட்சியினா் கருணாநிதி உருவப்படத்துக்கு மலா் தூவி, மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் நீதிமன்றம் அருகே ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் கல்பட்டு ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நகர இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் தலைமையில் நலத் திட்ட உதவிகள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நகா்மன்ற உறுப்பினா் நவநீதம், இளைஞரணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோன்று, பிடாகம் கிராமத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தினகரன் தலைமையில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் ஒன்றியச் செயலா்கள் முருகன், தெய்வசிகாமணி, மும்மூா்த்தி, பிரபாகரன், வேம்பி ரவி, ரவிதுரை ஜெயபால், முருகவேல், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, கோலியனூா் ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதானந்தம், மாவட்ட நிா்வாகிகள் ஸ்ரீவினோத், கபாலி, இளங்கோ, மாவட்டக் குழு உறுப்பினா்கள் வனிதா, சிவக்குமாா், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT