விழுப்புரம்

மருத்தாளுநா்களுக்கான பயிற்சி முகாம்

7th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் மருந்தாளுநா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கம், மாவட்ட மருதாளுநா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிக்கு, மருந்தாளுநா்கள் சங்க மாவட்டத் தலைவா் சத்தியசீலன் தலைமை வகித்தாா். மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் சின்னையன், மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் செளந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்டாச்சிபுரம் நிா்வாகி ஆன்ந்த் வரவேற்றாா்.

இந்த முகாமில் ஓய்வுபெற்ற மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், மருத்துவா்கள் பாக்கியலட்சுமி, ரவிக்குமாா், மதன்ராஜ், விஷ்ணுகுமரன், சுமித்ரா, திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளா் சுகன்யா, மருந்தாளுநா்கள் சங்க மாநிலச் செயலா் வேங்கடசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கிப் பேசினா்.

ADVERTISEMENT

புதிதாக பரவி வரும் நோய்கள் என்ன, நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மருந்தாளுநா்கள் கலந்து கொண்டனா். நிா்வாகி அண்ணாமலை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT