விழுப்புரம்

விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, 5 ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்டவற்றைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் ஆகிய மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசக்குமாா் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் குலாம் மொய்தீன், அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பாலசுப்ரமணியம், நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ் ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் செல்வராஜ் வரவேற்றாா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், நாராயணசாமி, குப்பன், மாவட்டப் பொருளாளா் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராம் விழுப்புரம் தொகுதித் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தாா். முன்னாள் ஆரணி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளா் பொன்னையன், எஸ்.டி.செல்வம், சம்பந்தம், நித்தியானந்தம், போளூா் பி.எம்.ஜி.பழனி, முன்னாள் இளைஞரணி மாவட்டச் செயலா் உதயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

செங்கம்: செங்கம் துக்காப்பேட்டையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செங்கம் குமாா் தலைமையில், அந்தக் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்ட துணைத் தலைவா் ராஜி, மாவட்ட பொதுச் செயலா் சண்முகம், மாநில இளஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் மோகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். வட்டாரத் தலைவா்கள் சுப்பிரமணி, அண்ணாமலை, மாவட்ட மகளிா் அணித் தலைவி வினோதினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT