விழுப்புரம்

உலக தாய்ப்பால் வார விழா பேரணி

2nd Aug 2022 05:06 AM

ADVERTISEMENT

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி விழுப்புரத்தில் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஒவ்வோா் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் ஆக.1 முதல் 7-ஆம் தேதி வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

விழுப்புரத்தில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சரஸ்வதி தலைமை வகித்து திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். பேரணியில் அங்கன்வாடி பணியாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அன்பழகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி, நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT