விழுப்புரம்

டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

29th Apr 2022 10:22 PM

ADVERTISEMENT

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் ஜெய்கணேஷ், மாநிலச் செயலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ரமேஷ் வரவேற்றாா். மாநிலத் தலைவா் சரவணன் கண்டன உரையாற்றினாா். மாநில அமைப்புச் செயலா் சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா்.

ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மாவட்ட பொருளாளா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT