விழுப்புரம்

மனைப்பட்டா வழங்க அளவீட்டுப் பணி

28th Apr 2022 10:42 PM

ADVERTISEMENT

செஞ்சி எம்ஜிஆா் நகரில் 300 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான அளவீட்டுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

செஞ்சி எம்ஜிஆா் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 300 குடும்பத்தினா் வீட்டுமனைப் பட்டா கேட்டு நீண்ட நாள்களாக போராடி வந்தனா்.

அமைச்சா் செஞ்சி மஸ்தானின் முயற்சியின் பேரில், எம்ஜிஆா் நகரிலுள்ள 25 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 300 குடும்பத்தினருக்கும் இடம் வகைப்பாடு செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதற்கான அளவீட்டுப் பணி வட்டாட்சியா் பழனி, வருவாய் ஆய்வாளா் கண்ணன் கண்காணிப்பில் வியாழக்கிழமை தொடங்கியது. வட்ட துணை ஆய்வாளா் அன்புமணி, நாகராஜன், குறுவட்ட நில அளவா் தங்கராஜ், ஹரிகிருஷ்ணன் உள்பட 32 போ் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT