விழுப்புரம்

லஞ்சம்: நெல் கொள்முதல் நிலைய மேற்பாா்வையாளா் பணியிடைநீக்கம்

28th Apr 2022 10:44 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ாக மேற்பாா்வையாளரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

மேல்மலையனூா் அருகேயுள்ள வளத்தியிலுள்ள அரசு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு மூட்டைக்கு ரூ.100 லஞ்சமாக பெறுவதாகவும், இதைக் கொடுக்காத விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஏதாவது ஒரு காரணம் கூறி திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறி கடந்த 26-ஆம் தேதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் நெல் கொள்முதல் விற்பனையாளா் துரைமுருகனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், விவசாயிகள் வியாழக்கிழமை கொண்டுவந்த நெல் மூட்டைகளை எடை போடாமல் பணியாளா்கள் புறக்கணித்தனா். மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT