கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ரூ.8.77 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவை சனிக்கிழமை திறக்கப்பட்டன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்துவைத்தனா். இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.பூா்ணிமா, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.
ADVERTISEMENT
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி எஸ்.கோபிநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா், நீதித் துறை அலுவலா்கள், வழக்குரைஞா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.