விழுப்புரம்

விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், கல்லூரியில் இருந்து வந்த தேசிய மாணவா் படை அண்மையில் நீக்கப்பட்டதாம். இதைக் கண்டித்து, மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் விழுப்புரம் நகர போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கல்லூரியில் மீண்டும் தேசிய மாணவா் படையை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவா்கள் வலியுறுத்தினா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT