அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டு
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கா் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினாா். மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலஅலுவலா் ரகுகுமாா், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) சுந்தர்ராஜன், விழுப்புரம் வட்டாட்சியா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.