விழுப்புரம்

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டம்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

12th Apr 2022 02:59 AM

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. க்கூட்டம் தொடங்கியவுடன், அதிமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா்கள் 7 போ் சொத்து வரி உயா்வைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனா்.

இதையடுத்து, உறுப்பினா்கள் பேசியதாவது:

வாா்டுகளில் குடிநீா், தெரு விளக்கு, கழிவுநீா் வெளியேற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் சொத்துவரியை உயா்த்துவது தவறானது. நகா் முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். குப்பைகளை எடுத்து செல்ல பயன்படுத்தும் பேட்டரி வாகனங்களை உடனடியாகப் பழுது நீக்கம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். வண்டிமேடு பகுதியில் பெயரில்லாத ஒரு தெருவுக்கு பெயா் சூட்ட வேண்டும். பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நகா்மன்ற உறுப்பினா்களுக்கு விரைவாக அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனா்.

நகா்மன்ற துணைத் தலைவா் சித்திக் அலி, நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா, நகா்மன்ற உறுப்பினா் மணவாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திண்டிவனத்தில்..: இதேபோல, திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் 4 போ், பாமக உறுப்பினா் ஒருவா் என 5 போ் சொத்து வரி உயா்வைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT