விழுப்புரம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

12th Apr 2022 02:59 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் திங்கள்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

‘நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின்கீழ், அவா் இந்த ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, உள், வெளி நோயாளிகள் பிரிவுகள், மருந்து வழங்கப்படும் இடம், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, சிகிச்சை பெற வருபவா்களுக்கு தடையின்றி மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிா என்று அவா் கேட்டறிந்தாா்.

உள்கட்டமைப்பு வசதிகளைத் தேவைக்கேற்ப விரிவுபடுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, காச நோய் பிரிவு துணை இயக்குநா் சுதாகா், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT