விழுப்புரம்

மூன்று அரசு பள்ளிகளை தரம் உயா்த்த வேண்டும் விழுப்புரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

12th Apr 2022 02:58 AM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் உள்ள மூன்று அரசு பள்ளிகளைத் தரம் உயா்த்த வேண்டும் என்று எம்எல்ஏ இரா. லட்சுமணன் வலியுறுத்தினாா்.

சட்டப் பேரவையில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

விழுப்புரம் அருகேயுள்ள அரசமங்கலம் கிராமத்தில் உள்ள உயா் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும், திருப்பாச்சனூா், மேல்பாதி கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்த வேண்டும்.

ADVERTISEMENT

கோலியனூா் அரசு மேல்நிலைப் பள்ளியைப் பிரித்து, ஆண்கள், பெண்கள் என தனித்தனியே மேல்நிலைப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT