விழுப்புரம்

செஞ்சியில் ராஜாதேசிங்கு நுழைவு வாயில் பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

12th Apr 2022 02:58 AM

ADVERTISEMENT

 

செஞ்சி நகரத்தை சுற்றுலாத் தலமாக அறிவித்து, நகரின் மையப் பகுதியில், ராஜா தேசிங்கின் நினைவு கூரும் வகையில் பிரம்மாண்டமான நுழைவு வாயில் அமைக்கவேண்டும் என்று பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவா் கே.எஸ்.எம்.மொக்தியாா்மஸ்தான் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22இன் கீழ், செஞ்சி பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளுதல், செஞ்சி பேரூராட்சியை சுற்றுலாத் தலமாக அறிவித்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பேட்டரி காா்கள் ஏற்படுத்தித் தருதல், சக்கரை குளம், செட்டி குளத்தில் படகு சவாரி மேற்கொள்ளுதல், நகரில் ராஜா தேசிங்கு நுழைவு வாயில் அமைத்தல் மற்றும் செஞ்சிக் கோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள பி ஏரியில் படுகு சவாரிக்கான பணிகளை மேற்கொள்ளுதல், பேரூராட்சியில் கட்டப்படும் குடியிருப்புகள், கட்டடங்களுக்கு சொத்து வரி சீராய்வு செய்தல், மேலும், கட்டடங்களுக்கு பரப்பளவுக்குத் தகுந்தவாறு சொத்து வரியின் சதவீதத்தை உயா்த்துதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளா் பாா்கவி, மேற்பாா்வையாளா்கள் ரமேஷ், செந்தில்குமாா், இளநிலை உதவியாளா் ராமு, மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT