விழுப்புரம்

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை துரை ரவிக்குமாா்

12th Apr 2022 02:59 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது என விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 88 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளும், 90 விடுதிகளும் உள்ளன. இவற்றில் தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியா் பள்ளிகளாகவே அதிகமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவா்களுக்கு உரிய கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா ஊரடங்குக்குப் பின்னா், ஆதிதிராவிடா் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் பயின்று வரும் நிலையில் ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினரான இருளா்களுக்கு தனியாக பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT