விழுப்புரம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

4th Apr 2022 11:18 PM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் என்.மேகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.மூா்த்தி, வட்டச் செயலா் ஆா்.கண்ணப்பன், ஓய்வு பெற்றோா் சங்க நிா்வாகி எம்.புருசோத்தமன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.சிவராமன்,ஏ.நாகராஜன்,ஏ.ராஜீவ்காந்தி, வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பிரகாஷ் உள்ளிட்டோா் பேசினா்.

திருவெண்ணெய்நல்லூா் கடை வீதியில் கட்சியின் வட்டச் செயலா் எஸ்.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரகண்டநல்லூரில் வட்டச் செயலா் எஸ்.கணபதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மேல்மலையனூா் அருகே வலசையில் கிளைச் செயலா் வேங்கடபதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.ராதாகிருஷ்ணன், வட்டச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செஞ்சியில் வட்டச் செயலா் ஏ.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு.வேல்மாறன் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT