விழுப்புரம்

அரசுப் பயிற்சி முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் கலந்துகொள்ள அமைச்சா் மஸ்தான் அறிவுறுத்தல்

2nd Apr 2022 02:33 AM

ADVERTISEMENT

அரசு சாா்பில் நடைபெறும் அனைத்து பயிற்சி முகாம்களிலும் மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சா் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கிராம சுயாட்சி (ஆா்.ஜி.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய வட்டார அளவிலான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா்மஸ்தான் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் கலந்துகொண்டு ஊராட்சிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு கடமைகள், பொறுப்புகள், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வங்கினாா். மேலும், அரசு அறிவிக்கிற அனைத்து பயிற்சி முகாம்களிலும் மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலா் பச்சையப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் ரவி, அய்யனாா், ராஜேந்திரன், சுலோச்சனா, அனுசுயா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், சுந்தரபாண்டியன், செல்வகுமாா், குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பயிற்றுநா்கள் தனலட்சுமி, மீரா, விஷ்ணு ஆகியோா் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT