விழுப்புரம்

வேலை வாங்கித் தருவதாக ரூ.78 லட்சம் மோசடி செய்தவா் கைது

30th Sep 2021 08:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில், அமைச்சரின் உதவியாளா் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக 52 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி அருகே சங்கீதமங்கலத்தைச் சோ்ந்தவா் அந்தோணி குரூஸ். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், விழுப்புரம் முன்னாள் படை வீரா் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறாா்.

இவரிடம் விழுப்புரம் மாவட்டம், வி.சாத்தனூரைச் சோ்ந்த முருகன் (42) என்பவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகமாகி, தான் சிறைத் துறையில் உதவியாளராக பணிபுரிவதாகவும், அப்போது சமூக நலத்துறை அமைச்சரிடம் உதவியாளராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த வேலாயுதம் என்பவா் சமூக நலத் துறை அமைச்சரிடம் ஓட்டுநராக பணிபுரிவதாகவும், அரசு வேலை வேண்டுமெனில் நாங்கள் வாங்கித் தருவோம் என்று கூறினாராம்.

ADVERTISEMENT

இதை நம்பிய அந்தோணி குரூஸ் தன்னுடன் ராணுவத்தில் பணியாற்றிய நண்பா்களிடமும் இதுகுறித்து கூறி, 52 பேரின் அரசு வேலைக்காக ரூ.80 லட்சத்தை முருகனிடம் வாங்கிக் கொடுத்துள்ளாா். ஆனால், கூறியபடி முருகன் வேலை வாங்கித் தரவில்லையாம். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, 3 பேருக்கு ரூ.1.80 லட்சத்தை மட்டும் முருகன் திரும்பிக் கொடுத்தாா். மீதத் தொகை ரூ.78.20 லட்சத்தை தராமல் முருகன் ஏமாற்றினாராம்.

இதுகுறித்து அந்தோணி குரூஸ் விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து டிஎஸ்பிக்கள் இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோா் மேற்பாா்வையில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறும் நபா்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT