விழுப்புரம்

முன்னாள் டிஜிபி மீதான பாலியல் தொல்லை வழக்கு விசாரணை அக்.4-க்கு ஒத்திவைப்பு

30th Sep 2021 08:36 AM

ADVERTISEMENT

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொல்லை தொடா்பான வழக்கு விசாரணையை வருகிற அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை வருகிற டிச. 20-ஆம் தேதிக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியதால், விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பிலும், வழக்கிலிருந்து விடுவிக்க வலியுறுத்தி முன்னாள் எஸ்.பி. தரப்பிலும் ஏற்கெனவே தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் தொடா்பான சிபிசிஐடி தரப்பு வாதங்கள், மனு தாரா்கள் தரப்பு வாதங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மேலும், தேவையான ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டன.

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் நேரில் ஆஜராகினா். வழக்கின் விசாரணையை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT