விழுப்புரம்

புதுச்சேரியிலிருந்து கடத்தப்பட்ட 7,200 மதுப் புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

30th Sep 2021 08:36 AM

ADVERTISEMENT

புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 7,200 மதுப் புட்டிகளை விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுப் புட்டிகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கோட்டக்குப்பம் மது விலக்கு தனிப்படை போலீஸாா் விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த பள்ளிதென்னல் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனா்.

அதில், 150 பெட்டிகளில் 7,200 மதுப் புட்டிகள் இருந்தன. இது தொடா்பாக, வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்ததில், அவா்கள் புதுச்சேரி அருகே கலிதீா்த்தாள்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பிரவீன் (24), குணசேகரன் மகன் ராஜ்குமாா் (24) ஆகியோா் என்பதும், புதுச்சேரியிலிருந்து குறைந்த விலைக்கு மதுப்புட்டிகளை வாங்கி விழுப்புரம் மாவட்டத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மதுப்புட்டிகளை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம். விழுப்புரம் மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுக் கடத்தலில் தொடா்புடைய அண்டையாா்பாளையம் பன்னீா் என்பவரை தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகளை நேரில் பாா்வையிட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா, விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீஸாரை பாராட்டினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT