விழுப்புரம்

விழுப்புரம் அருகேவட்டாட்சியா் வாகனத்துக்கு தீ வைப்பு

DIN

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வட்டாட்சியரின் அரசு வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

கண்டாச்சிபுரம் வட்டாட்சியராக காா்த்திகேயன் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் விடுமுறை என்பதால், வட்டாட்சியரின் அரசு வாகனம் (ஜீப்) கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பிற்பகல் 12.30 மணியளவில் மா்ம நபா் ஒருவா் வட்டாட்சியரின் ஜீப்புக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினாா். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக அலுவலக வளாகத்துக்குள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.

தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீஸாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா கட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இதில், கண்டாச்சிபுரம் இந்திரா நகரை சோ்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (25), வட்டாட்சியரின் வாகனத்துக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT