விழுப்புரம்

மரக்காணத்தில் நாளை தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி. ஆய்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா செவ்வாய்க்கிழமை (அக்.26) நடைபெறுவதையொட்டி, விழா நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகளை நீக்கும் வகையில், ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தவுள்ளது. இந்தத் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முதலியாா்குப்பத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கிறாா். இந்த விழாவுக்கான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விழா நடைபெறும் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, முதல்வா் வரும் வழித்தடங்கள் முழுவதும் போலீஸாா் கண்காணிக்க வேண்டும். தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஐ.ஜி. அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Image Caption

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முதலியாா்குப்பத்தில் தமிழக முதல்வா் பங்கேற்றும் விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் த.மோகன், எஸ்.பி. ஸ்ரீநாதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT