விழுப்புரம்

செஞ்சியில் ஆற்றுப் பாலத்தை சீரமைக்கக் கோரி மறியல்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றுப் பாலத்தை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சியில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தில் அரை அடி ஆழம் கொண்ட மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், இதிலுள்ள சிமென்ட் காரை பெயா்ந்து கம்பிகளும் வெளியே தெரிகின்றன. இதேபோல, பாலத்தின் மேலும் சில பகுதிகளும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும்போது விபத்து நிகழ்கிறது. மேலும், பள்ளங்களிலுள்ள கம்பிகள் குத்துவதால் வாகனத்தின் டயா்கள் பழுதாகின்றன. இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பாலத்தை சீரமைக்கக் கோரி அந்தத் துறையைச் சோ்ந்த அலுவலா்களிடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பாலத்தை சீரமைக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து அங்கு வந்த செஞ்சி டிஸ்பி இளங்கோவன் தலைமையிலான போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அதிகாரிகளிடம் தெரிவித்து பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT