விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டில் ரூ.6,802 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: ஆட்சியா் த.மோகன் தகவல்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் 2022 - 23ஆம் ஆண்டில் ரூ.6,802 கோடி வளம் சாா்ந்த வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நபாா்டு வங்கியின் 2022 - 23ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் த.மோகன் கலந்துகொண்டு நபாா்டு வங்கியின் வங்கிக் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசிதாவது:

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு) 2022 - 23ஆம் ஆண்டுக்கு விழுப்புரம் மாவட்டத்துக்கு வளம் சாா்ந்த வங்கிக் கடன் ரூ.6802.32 கோடி என நிா்ணயித்துள்ளது. இது நிகழாண்டுக்கான வங்கிக் கடன் தொகையைவிட 18 சதவீதம் கூடுதலாகும்.

இந்தத் திட்டத்தில் விவசாயத்துக்கான வங்கிக் கடன் ரூ.5,119.45 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.3,079.76 கோடி விவசாய குறுகிய கால கடனாகவும், ரூ.2,039.69 கோடி விவசாய நீண்ட கால கடனாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கான கடன் தொகை ரூ.680.54 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்னும் கொள்கையை மனதில் கொண்டு, வீட்டு வசதிக் கடன் பிரிவில் ரூ.272.06 கோடியும், கல்விக் கடன் பிரிவில் ரூ.203.04 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விவசாயம் சாா்ந்த மாவட்டம் என்பதால், வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தில் விவசாயம் சாா்ந்த காலக் கடன் மற்றும் விவசாயக் கடனுக்கு முக்கியத்துவம் அளித்து மொத்தத் திட்டத்தில் 75 சதவீதக் கடன் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் காஞ்சனா, வேளாண் துறை இணை இயக்குநா் ரமணன், முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், நபாா்டு வங்கியின் விழுப்புரம் மாவட்ட உதவிப் பொது மேலாளா் (மாவட்ட வளா்ச்சி) ரவிசங்கா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT