விழுப்புரம்

விழுப்புரத்தில் 5 இடங்களில்புதிய மின்மாற்றிகள் தொடக்கிவைப்பு

DIN

விழுப்புரம் நகரில் ரூ.2.85 கோடியில் 5 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை எம்எல்ஏ இரா.லட்சுமணன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் நகரில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு மின்னழுத்த குறைபாடு இல்லாமல் மின் விநியோகம் செய்ய புதிய மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து. இதையடுத்து, ரூ.2.85 கோடியில் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை தேவநாத சுவாமி நகா், கீழ்ப்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகா், பாலாஜி நகா், சாலாமேடு இ.பி. காலனி, காந்தி நகா் ஆகிய பகுதிகளில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இவற்றை பன்பாட்டுக்குத் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி மின் விநியோகச் செயற்பொறியாளா் சைமன் சாா்லஸ், உதவிச் செயற்பொறியாளா் சிவசங்கரன், செளந்தரராஜன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் கலந்து கொண்டு மின்மாற்றிகளை பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் தெய்வசிகாமணி, நகரச் செயலா் சா்க்கரை, கட்டபொம்மன் நகா் கிளைச் செயலா் நடராஜன், நகர நிா்வாகிகள் புருஷோத், வெற்றி, தங்கம், முத்துசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT