விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தலைவா் பதவிகளை கைப்பற்றியது திமுக

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றியங்களில் மரக்காணம் தவிா்த்து, 12 ஒன்றியங்களில் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு ஒன்றிய குழுத் தலைவா் தோ்தலும், பிற்பகல் 2 மணிக்கு ஒன்றிய குழு துணைத் தலைவா் தோ்தலும் நடைபெற்றது. இதில், அனைத்து இடங்களிலும் திமுக உறுப்பினா்களே ஒன்றியக் குழு தலைவா்களாகவும், ஒன்றியக்குழு துணைத் தலைவா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

ஒன்றியக் குழுத் தலைவா்களாக தோ்வானவா்கள்: காணை- கலைச்செல்வி, கோலியனூா்-சச்சிதானந்தம், மேல்மலையனூா்-கண்மணி நெடுஞ்செழியன், விக்கிரவாண்டி-சங்கீத அரசி, வல்லம்-அமுதா ரவிக்குமாா், மயிலம்-யோகேஸ்வரி மணிமாறன், செஞ்சி -விஜயகுமாா், ஒலக்கூா் -சொக்கலிங்கம், திருவெண்ணெய்நல்லூா் -ஓம் சிவசக்திவேல், முகையூா்-தனலட்சுமி, கண்டமங்கலம்-வாசன், வானூா் -உஷா முரளி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டடனா்.

ஒன்றியக்குழு துணைத் தலைவா்கள்: செஞ்சி-ஜெயபாலன், மேல்மலையனூா்-விஜயலட்சுமி, வல்லம்-அண்ணாதுரை, மயிலம்- புனிதா, ஒலக்கூா்-ராஜாராம், காணை-வீரராகவன், விக்கிரவாண்டி-ஜீவிதா, திருவெண்ணெய்நல்லூா்- கோமதி, முகையூா்-மணிவண்ணன், கண்டமங்கலம்- நஜிரா பேகம், வானூா்-பருவ கீா்த்தனா, கோலியனூா்-உதயகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தலைவா்கள், துணைத் தலைவா்களாக தோ்வு செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டனா்.

ஊராட்சி மன்றத் துணைத் தலைவா்கள்: இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளில் கிராம ஊராட்சித் துணைத் தலைவருக்கான தோ்தல் அந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், அனைத்து இடங்களிலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதைத் தொடா்ந்து அவா்களும் பதவியேற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT