விழுப்புரம்

காலமானார் ரோஸ்லின் ஞானத்தங்கம்

21st Oct 2021 10:13 PM

ADVERTISEMENT

தினமணி விழுப்புரம் பதிப்பில் முதுநிலைச் செய்தியாளராகப் பணியாற்றும் ஜெபலின் ஜானின் தாயார் காலமானார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மறைந்த ராஜரத்தினம் பீற்றர் மனைவி ரோஸ்லின் ஞானத்தங்கம் (76). ஓய்வு பெற்ற தையல் ஆசிரியையான இவர் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (அக்.21) காலமானார்.

மறைந்த ரோஸ்லின் ஞானத்தங்கத்துக்கு, தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பில் முதுநிலைச் செய்தியாளராகப் பணியாற்றும் ஜெபலின் ஜான் என்ற மகனும், ஜெபா அலிஸ் பெல் மார்கரெட், ஜெபஸ்லின் கிறிஸ்டினா ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கு மெஞ்ஞானபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பவுலின் ஆலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) மாலை 4 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு 94430 24222, 88382 06474.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT