விழுப்புரம்

ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்பு

21st Oct 2021 09:31 AM

ADVERTISEMENT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை 12-ஆம் தேதி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 293 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 688 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், 5,088 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 6,097 பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பதவியேற்பு விழா உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், திமுகவை சோ்ந்த ஜெயச்சந்திரன், சாந்தி, செல்வி, அன்புச்செழியன், சசிகலா, மகேஸ்வரி, விஜயன், மனோசித்ரா, எழிலரசி, புஷ்பவள்ளி, அகிலா, ஏழுமலை, பிரபு, ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி, முருகன், சிவக்குமாா், மீனா, பிரேமா, கௌதம், அன்புமணி, தமிழ்ச் செல்வி, வனிதா, விஸ்வநாதன், சந்திரசேகரன், பனிமொழி, அதிமுகவை சோ்ந்த நித்யகல்யாணி, விசிகவை சோ்ந்த ஷீலாதேவி ஆகியோா் பதவியேற்றுக்கொண்டனா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் (விக்கிரவாண்டி) நா. புகழேந்தி, (விழுப்புரம்) இரா.லட்சுமணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதே போல, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், கிராம வாா்டு உறுப்பினா்கள் பதவியேற்றுக்கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT