விழுப்புரம்

செஞ்சியிலிருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவை: அமைச்சா் மஸ்தான் தொடக்கிவைப்பு

21st Oct 2021 09:31 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

செஞ்சியிலிருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டுமென செஞ்சி பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதை ஏற்று செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதிக்கு சேத்பட், ஆரணி, வேலூா் வழியாக திருப்பதிக்கு புதிய பேருந்தை அமைச்சா் கே.எஸ். மஸ்தான் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளா்கள் வணிகம் துரைசாமி, இயக்கம் மணி, செஞ்சி பணிமனை மேலாளா் சுரேஷ், தொமுச துணைப் பொதுச் செயலா் என்.கே.செல்வராஜ், செயலா் நாராயணசாமி, தியாகராஜன், தொழில் நுட்பச் செயலா் காதா்நவாஸ் உறுப்பினா்கள் பழனி, கோதண்டராமன், கிருஷ்ணகுமாா், ரிஸ்வான், பாஷா, கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் பேருந்து செஞ்சியிலிருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருப்பதியை சென்றடையும். திருப்பதியிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு செஞ்சி பேருந்து நிலையத்தை வந்தடையும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT