விழுப்புரம்

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு சாதிகளை சரிபாா்க்க அறிவுரை

21st Oct 2021 09:27 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உட்பிரிவு சாதியை, வேலைவாய்ப்பு இணையதளத்தில் சரிபாா்த்துக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மனிதவள மேம்பாட்டுத் துறையின் அரசாணை எண். 75 (நாள் 26.7.2021) மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (வன்னியகுல ஷத்திரியா்) 10.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினா் - 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் - 2.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 26.2.2021 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உட்பிரிவுகளின் அடிப்படையில், பரிந்துரை செய்வதற்கான மென்பொருள் உருவாக்கப்படுவதற்கு ஏதுவாகவும், இனம் பிரிக்கப்பட்ட உட்சாதிகளை அந்தந்த பிரிவுகளுக்கு உரிய இடத்தில் வகைப்படுத்தப்பட்டு இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள மேற்காணும் வகுப்பு பதிவுதாரா்கள் தங்களுடைய சாதி மற்றும் உட்பிரிவுகள் சரியாக உள்ளனவா என்று அந்த இணையதளத்திலோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தையோ நேரில் தொடா்புகொண்டு சரிபாா்த்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT