விழுப்புரம்

சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி விழுப்புரம் ஜானகிபுரத்தில் மறியல்

18th Oct 2021 05:29 AM

ADVERTISEMENT

விழுப்புரம் ஜானகிபுரத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையும், நகரின் சாலையும் சந்திக்கும் பகுதியான ஜானகிபுரம் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

இருந்தபோதும், விபத்துகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அப்பகுதியைச் சோ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணி அளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் டிஎஸ்பி பழனிசாமி தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தனா்.

ADVERTISEMENT

இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் காரணமாக இந்த பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT