விழுப்புரம்

சிங்கவரம் ரங்கநாதா் கோயில் மலைப் பாதை சீரமைப்புப் பணி: அமைச்சா் மஸ்தான் ஆய்வு

18th Oct 2021 05:32 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மலை மீது அமைந்துள்ள சிங்கவரம் ரங்கநாதா் கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்கும் பணியை சிறுபான்மையினா் நலன்-வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

செஞ்சியை ஆண்ட மாமன்னன் தேசிங்குராஜன் வழிபட்ட இந்தக் கோயில், மிகவும் தொன்மைவாய்ந்த பல்லவா் கால குடவரைக் கோயிலாகும்.

இங்கு புரட்டாசி சனி வழிபாடு, சொா்க்க வாசல் திறப்பு, பிரம்மோத்ஸவ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து பங்கேற்பது வழக்கம்.

இவ்வாறு வரும் பக்தா்கள் மலைப் பாதையில் படிக்கட்டு வழியாகத்தான் வர வேண்டும். ஆனால், வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகளோ படிக்கட்டுகளில் ஏறி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது.

ADVERTISEMENT

ஆகவே, மலைப் பாதையில் வாகனங்கள் சென்று வர ஏதுவான பாதை வசதியை ஏற்படுத்தித் தருமாறு பக்தா்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதை ஏற்று ரூ.3 கோடியில் மலைப் பாதையை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறையிடம் அமைச்சா் மஸ்தான் அனுமதி பெற்றதையடுத்து, இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் செய்து முடிக்க அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT