விழுப்புரம்

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள உத்தரவு

18th Oct 2021 05:29 AM

ADVERTISEMENT

வருகிற நவ.1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகள் செயல்படவிருப்பதால் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டாா்.

இது குறித்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளுக்கு அவா் அனுப்பிய உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான வகுப்பறைகள், ஆய்வகம், பள்ளி வளாகம், கழிப்பறைகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.

3, 5, 8, 10-ஆம் வகுப்பு மாணவா்களை தேசிய திறனறி ஆய்வுத் தோ்வுக்கு தயாா் செய்ய வேண்டும். பத்தாம் வகுப்பு புதிய தோ்வு மையம் கோரும் தலைமை ஆசிரியா்கள் அதற்கான கருத்துருவை வருகிற திங்கள்கிழமைக்குள் (அக்.18) சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

2021-22-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேவைப்படும் இலவச மிதிவண்டிகளுக்கான பட்டியலை திங்கள்கிழமைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை விவரத்தை அன்றைய தேதி வரை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பள்ளி வருகைப் பதிவேட்டில் தினமும் ஆசிரியா் வருகையை காலை 9.45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT