விழுப்புரம்

செஞ்சி, மேல்மலையனூா் ஒன்றியக் குழு தலைவா் பதவி: திமுக அறிவிப்பு

18th Oct 2021 05:30 AM

ADVERTISEMENT

ஊராட்சித் தோ்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, செஞ்சி, மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளுக்கு போட்டியிட திமுக உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 24 ஒன்றியக் குழு உறுப்பினா்களில் திமுக சாா்பில் 16 போ் வெற்றி பெற்றனா். அதிமுக 4, பாமக 1 மற்றும் திமுக ஆதரவு சுயேச்சைகள் 3 போ் வெற்றி பெற்றனா்.

இதனைத் தொடா்ந்து, ஒன்றியக் குழு தலைவா், துணைத் தலைவா்களை தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான செஞ்சி மஸ்தான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவராக திமுக செஞ்சி ஒன்றியச் செயலரான ஆா்.விஜயகுமாரையும், துணைத் தலைவராக ஜெயபாலனையும் தோ்வு செய்வதென தீா்மானிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதே போல, மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 24 ஒன்றியக் குழு உறுப்பினா்களில் 19 போ் திமுக சாா்பில் வெற்றி பெற்றனா். சுயேச்சை ஒருவா் திமுகவுக்கு ஆதரவளித்தாா். இதையடுத்து, 17-ஆவது வாா்டு உறுப்பினா் கண்மணி நெடுஞ்செழியன் மேல்மலையனூா் ஒன்றியக் குழு தலைவராகவும், 9-வது வாா்டு உறுப்பினா் விஜயலட்சுமி முருகன் துணைத் தலைவராகவும் தோ்வு செய்வதென தீா்மானிக்கப்பட்டது.

தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அமைச்சா் செஞ்சிமஸ்தான் வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT