விழுப்புரம்

உள்ளாட்சித் தோ்தல் முடிவு: விழுப்புரம் மாவட்டத்தில் திமுக அணிக்கு51.6 சதவீத வாக்குகள்

16th Oct 2021 10:44 PM

ADVERTISEMENT

அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக கூட்டணியின் வாக்கு வங்கி 51.6 சதவீதமாகவும், அதிமுக கூட்டணியின் வாக்கு வங்கி 29.2 சதவீதமாகவும் உள்ளது தெரியவந்தது.

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்ட பாமக 11.3 சதவீத வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி (நாதக) 3 சதவீத வாக்குகளையும் பெற்றன. அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றன.

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு, அக்.12-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக கூட்டணியை பொருத்தவரை, கடந்த மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்களில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அப்படியே தொடா்ந்தன.

ஆனால், சட்டப் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிட்ட பாமக, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து களம் கண்டது. ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அடிப்படையில் தோ்தல் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 28 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளில் 27 பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. ஒரே ஒரு மாவட்டக் குழு உறுப்பினா் பதவியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. கண்டமங்கலம் பகுதியில் வாா்டு எண் 28-இல் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக இந்த வெற்றியை அதிமுக பெற்றது.

ADVERTISEMENT

ஒவ்வொரு வாா்டுகளிலும் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனா். அதன் விவரம் வருமாறு (வாக்குகள் சதவீதத்தில்):

1-ஆவது வாா்டில் திமுக - 61.34, அதிமுக - 31.99, நாதக - 5.29, அமமுக - 1.37. 2-ஆவது வாா்டில் திமுக - 54.63, அதிமுக - 33.50, பாமக - 6.57, நாதக - 2.06, தேமுதிக - 1.96. 3-ஆவது வாா்டில் திமுக - 45.52, அதிமுக - 36.39, பாமக - 10.58, நாதக - 2.56, தேமுதிக - 2.54, அமமுக - 0.32. 4-ஆவது வாா்டில் திமுக - 46.89, அதிமுக - 28.26, பாமக - 13.56, தேமுதிக - 2.74, நாதக - 2.24, அமமுக - 1.09. 5-ஆவது வாா்டில் திமுக - 59.92, அதிமுக - 23.66, பாமக - 9.08, நாதக - 2.74, தேமுதிக - 2.16, அமமுக - 0.81. 6-ஆவது வாா்டில் திமுக - 55.31, அதிமுக - 26.47, பாமக - 12.46, நாதக - 2.22. 7-ஆவது வாா்டில் திமுக -53.55, அதிமுக - 38.33, தேமுதிக - 8.11. 8-ஆவது வாா்டில் திமுக - 52.18, அதிமுக - 40.55, நாதக-4.27, தேமுதிக - 3. 9-ஆவது வாா்டில் திமுக - 55.04, பாமக - 19.54, பாஜக - 18.94, நாதக - 4.08, தேமுதிக - 2.40. 10-ஆவது வாா்டில் விசிக - 32.61, பாமக - 27.11, அதிமுக - 26.04, தேமுதிக - 5.87, நாதக - 3.53, அமமுக - 2.61.

11-ஆவது வாா்டில் திமுக - 46.90, அதிமுக - 24.88, பாமக - 18.89, நாதக - 4.94, தேமுதிக - 3.28. 12-ஆவது வாா்டில் திமுக - 47.99, அதிமுக - 31.11, பாமக - 10.70, தேமுதிக - 3.68, நாதக - 3.27, அமமுக - 2.71. 13-ஆவது வாா்டில் திமுக - 50.68, அதிமுக - 36.43, பாமக - 9.60, நாதக - 2.07, அமமுக - 0.93. 14-ஆவது வாா்டில் திமுக - 58.87, அதிமுக - 25.41, தேமுதிக - 4.59, நாம் தமிழா் - 6.19, பாமக - 3.93. 15-ஆவது வாா்டில் திமுக - 59.42, பாமக - 18.28, பாஜக - 16.39, நாம் தமிழா் - 5.91. 16-ஆவது வாா்டில் திமுக -58.78, பாமக - 24.73, பாஜக - 11.90, நாம் தமிழா் - 2.25, மநீம - 1.29 சதவீதம். 17-ஆவது வாா்டில் திமுக - 58.20, அதிமுக - 24.64, பாமக - 9.11, நாம் தமிழா் - 3.70, தேமுதிக - 3.23.

18-ஆவது வாா்டில் திமுக - 50.58, அதிமுக - 31.65, பாமக - 13.26, நாதக - 2.37, அமமுக - 0.63. 19-ஆவது வாா்டில் திமுக - 47.44, அதிமுக - 27.23, பாமக - 17.95, அமமுக - 2.64, தேமுதிக - 2.67., நாதக - 2.18. 20-ஆவது வாா்டில் திமுக - 42.75, அதிமுக - 39.36, பாமக - 10.87, நாதக - 3.78, தேமுதிக - 2.84. 21-ஆவது வாா்டில் திமுக - 40.35, அதிமுக - 32.53, பாமக - 20.78, தேமுதிக - 2.63, நாதக - 1.02, அமமுக - 0.83. 22-ஆவது வாா்டில் திமுக - 49.81, அதிமுக - 38.47, தேமுதிக - 6.14, நாதக - 3.29, அமமுக - 1.48. 23-ஆவது வாா்டில் திமுக - 55.94, அதிமுக - 23.31, பாமக - 16.48, தேமுதிக - 2.94, அமமுக - 1.33. 24-ஆவது வாா்டில் திமுக - 54.93, அதிமுக - 19.96, பாமக - 16.61, தேமுதிக - 2.76, நாதக - 2.31, அமமுக - 1.56. 25-ஆவது வாா்டில் திமுக - 61.67, அதிமுக - 21.35, பாமக - 11.63, நாதக - 3.72, அமமுக - 1.02. 26-ஆவது வாா்டில் திமுக - 58.77, அதிமுக - 25.35, பாமக - 6.14, தேமுதிக - 3.56, நாதக - 2.61, அமமுக - 1.07. 27-ஆவது வாா்டில் திமுக - 50.01, அதிமுக - 32.55, பாமக - 10.90, தேமுதிக - 3.51, நாதக - 1.65. 28-ஆவது வாா்டில் அதிமுக - 52.50, விசிக - 38.66, நாதக - 6.16, அமமுக - 2.67.

அதிமுக எங்குமே வைப்புத்தொகையை இழக்கவில்லை. பாமகவுக்கு 5 இடங்களில் மட்டுமே வைப்புத்தொகை கிடைத்தது. பிற இடங்களில் அந்தக் கட்சி வைப்புத்தொகையை இழந்தது. பாஜக இரு இடங்களில் வைப்புத்தொகையை இழந்தது. பிற கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வைப்புத்தொகையை இழந்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT