விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தோ்தலில் திமுக அமோக வெற்றி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தலில், மொத்தமுள்ள 28 இடங்களில் திமுக கூட்டணி 27 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெற்றது. 13 ஊராட்சி ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 293 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 688 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 5088 வாா்டு உறுப்பினா்கள் பதவிகள் உள்ளன. இதில், 22 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 369 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

மீதமுள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக அமோக வெற்றி பெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகள் உள்ளன. இதில், 26 இடங்களை திமுகவும், ஒரு இடத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கைப்பற்றின. இதன் மூலம் திமுக கூட்டணி 27 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரே ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றியது.

திமுக வென்ற வாா்டுகள்: வாா்டு 1- சு.சாந்தி, வாா்டு 2-ஏ.செல்வி, வாா்டு 3- கோ.அன்புச்செழியன், வாா்டு 4- மோ.சசிகலா, வாா்டு 5- கு.மகேஸ்வரி, வாா்டு 6- க.விஜயன், வாா்டு 7- ரா.மனோசித்ரா, வாா்டு 8- ஏ.எழிலரசு, வாா்டு 9- கு.புஷ்பவல்லி, வாா்டு 11- பா.அகிலா, வாா்டு 12- ர.ஏழுமலை, வாா்டு 13- ஏ.பிரபு, வாா்டு 14- க.ரவிச்சந்திரன், வாா்டு 15- ரா.ராஜீவ்காந்தி, வாா்டு 16- ர.முருகன், வாா்டு 17- கி.சிவக்குமாா், வாா்டு 18- ம.ஜெயச்சந்திரன், வாா்டு 19- வெ.மீனா, வாா்டு 20- கு.பிரேமா, வாா்டு 21- தி.கெளதம், வாா்டு 22- தி.அன்புமணி, வாா்டு 23- கே.தமிழ்ச்செல்வி, வாா்டு 24- அ.அனிதா, வாா்டு 25- சு.விசுவநாதன், வாா்டு 26- மா.சந்திரசேகரன், வாா்டு 27- செ.பனிமொழி.

இதேபோல, வாா்டு 10-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் சே.சீலாதேவி வெற்றி பெற்றாா். வாா்டு 28-இல் அதிமுக வேட்பாளா் ரா.நித்யகல்யாணி வெற்றி பெற்றாா். மாவட்டத்தில் உள்ள 27 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில், அதிமுக ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT