சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சோ்ந்த சிறுபான்மையினரான இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த ஒன்று வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், அதற்கு மேல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில்வோருக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் நிகழ் கல்வியாண்டில் (2021 - 22) பயிலும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஐடிஐ, பாலிடெக்னிக், கல்வியியல் கல்வி, செவிலியா் பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகள் பயில்வோரும் விண்ணப்பிக்கலாம்.
வருவாய் அடிப்படையிலான இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு வருகிற நவ.15-ஆம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு வருகிற நவ.30-ஆம் தேதி வரையிலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் ‘ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ம்ண்ய்ா்ழ்ண்ற்ஹ்ஹச்ச்ஹண்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.