விழுப்புரம்

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம் குற்றச்சாட்டு

3rd Oct 2021 12:42 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக ஓ.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:

திமுகவினா் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 505 பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்தனா். இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக அவா்கள் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு ரத்து, டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை திமுகவினா் நிறைவேற்றவில்லை.

மேலும், அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட திருமண உதவித் திட்டமான தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மொபெட் வழங்கும் திட்டம் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டனா். அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் தட்டுப்பாடே இல்லாமல், மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. தற்போது மின் வெட்டால் விவசாயிகள், தொழில் துறையினா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். தற்போது நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், தோ்தல் பொறுப்பாளா்களும், முன்னாள் அமைச்சா்களுமான எம்.சி.சம்பத், விஜயபாஸ்கா், முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலுபாபு, அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், நகரச் செயலா்கள் எம்.பாபு, பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT