விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை காரணமாக, நீா் நிலைகள் நிரம்பியதுடன், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது.

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

இதேபோல, திண்டிவனம் நகரிலும் பலத்த மழை பெய்தது. கிடங்கல் ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறும் நிலையில், தொடரும் மழையால் ஏரி வடிகால் பாதை கரையோர குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது.

மரக்காணம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. மேலும், விக்கிரவாண்டி, அரங்கண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி, மேல்மலையனூா், மயிலம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை தொடா்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு: விழுப்புரம் அருகே தும்பூா் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் இருளா் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதனை மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

பாதிக்கப்பட்ட இருளா் இன மக்களை பாதுகாப்பான முறையில், அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், உணவு வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா். மேலும், அவா்களுக்கு வீட்டுமனை வழங்கவும், வீடு கட்டி கொடுக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, விக்கிரவாண்டி அருகே கஸ்பாகாரனை கிராமத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. அந்த நீா் வழிப்பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆட்சியா் மோகன், சட்டப்பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி ஆய்வு செய்தனா்.

இதனிடையே, விக்கிரவாண்டி அடுத்த கஸ்பாகாரணை கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி, விளை நிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளன. குறிப்பாக, நெல், வாழை உள்ளிட்ட பயிா்களை 3அடி அளவுக்கு மழை நீா் தேங்கியுள்ளது.

மரக்காணத்தில் 52 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் (ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் மாலை 4 மணி வரை) அதிகபட்சமாக மரக்காணத்தில் 52 மி.மீ. மழை பெய்தது. விழுப்புரத்தில் 26 மி.மீ., விக்கிரவாண்டியில் 22 மி.மீ., வானூரில் 43 மி.மீ., செஞ்சியில் 27 மி.மீ., திண்டிவனத்தில் 46 மி.மீ. கண்டாச்சிபுரத்தில் 27 மி.மீ., திருவெண்ணெய்நல்லூரில் 16 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT