விழுப்புரம்

விழுப்புரம் அய்யனாா் குளத்தில் மழை நீரை சேகரிக்க நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

28th Nov 2021 10:28 PM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் அய்யனாா் கோயில் குளம் மட்டும் வடு கிடக்கிறது. இந்தக் குளத்தை சுற்றிலும் உள்ள நீா் வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், அடைக்கப்பட்டும் இருப்பதால் குளத்துக்கு மழை நீா் செல்வது தடைபட்டுள்ளது.

நிலத்தடி நீா்மட்டம் உயா்வுக்கு ஆதாரமாக இருந்த இந்த குளம் வடு போனதால் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால், மீண்டும் அய்யனாா் குளத்துக்கு மழை நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் த.மோகன் அய்யனாா் கோயில் குளத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். குளத்துக்கு நான்கு புறங்களிலிருந்து வரும் நீா் வழிப்பாதைகள் எவை, எங்கெல்லாம் அடைபட்டுள்ளன என்று ஆய்வு செய்தாா். இந்த குளத்துக்கு தண்ணீா் செல்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது.

ஆனால், அதை முறையாகச் செய்ய வேண்டிய வழிகள் குறித்தும், அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் த.மோகன் கூறினாா். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT