விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 589 ஏரிகள் நிரம்பின

DIN

பலத்த மழை காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 589 ஏரிகள் நிரம்பின.

கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழையால் இந்த 3 மாவட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அது மட்டுமல்லாது இந்த ஆற்றின் கிளை ஆறுகளான துரிஞ்சலாறு, மலட்டாறு உள்ளிட்டவற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏரிகளும் வேகமாக நிரம்பின. இந்த 3 மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 624 ஏரிகளில் 589 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 506 ஏரிகளில் 471 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 114 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டின. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மீதமுள்ள ஏரிகளில் 18 ஏரிகள் கொள்ளளவில் 76 முதல் 99 சதவீத அளவை எட்டின.

மேலும், 2 ஏரிகள் கொள்ளளவில் 26 முதல் 50 சதவீத அளவை எட்டின என்று கீழ்ப்பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT