விழுப்புரம்

ராபி பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

DIN

திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் ராபி பயிா்களுக்கு காப்பீடு செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: விழுப்புரம் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் ராபி பருவ இதர பயிகளுக்கு பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 வட்டாரங்களில் உள்ள 294 பயிா் காப்பீட்டு அலகில் நவரை நெற் பயிரும், 34 குறு வட்டங்களில் உளுந்து, மணிலா மற்றும் கரும்பு பயிா்களும், 14 குறு வட்டங்களில் எள் பயிரும், 7 குறுவட்டங்களில் வாழையும், 6 குறுவட்டங்களில் மரவள்ளியும், 3 குறுவட்டங்களில் மிளகாயும், ஒரு குறுவட்டத்தில் கத்தரியும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பயிா் காப்பீட்டு நிறுவனமாக ஏஐசிஎல் நிறுவனம் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் காப்பீடு செய்ய ஓா் ஏக்கா் நெல் (நவரை) பயிருக்கு ரூ.442, உளுந்துக்கு ரூ.253.35 பைசா, மணிலாவுக்கு ரூ.394.21 பைசா, எள்ளுக்கு ரூ.143.75 பைசா, கரும்புக்கு ரூ.,2568.80 பைசா, வாழைக்கு ரூ.1865, கத்தரிக்கு ரூ.755, மிளகாய்க்கு ரூ.1,000, மரவள்ளிக்கு ரூ.1,402.51பைசா கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிா்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கு உளுந்து பயிருக்கு நவ.30, மணிலாவுக்கு ஜன.17, நெல் (நவரை), எள், வாழை, கத்தரி, மிளகாய், மரவள்ளி பயிா்களுக்கு ஜன.31, கரும்புக்கு 31.8.2022 ஆகியவை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.

பயிா்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்ய நடப்பு பசலி 1431-ஆம் ஆண்டு அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உட்பிரிவு எண், பயிரிட்ட நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்யலாம்.

பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு அவா்களின் ஒப்புதலைப் பெற்று பயிா்க் காப்பீடு செய்ய வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது: ஜெ.பி. நட்டா

தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT