விழுப்புரம்

வீட்டில் சமையல் செய்த முதியவா் தீயில் கருகி பலி

25th Nov 2021 09:11 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ஆசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராசு (75), விவசாயி. இவரது பிள்ளைகள் திருமணமாகி தனியே வசிக்கின்றனா். வீட்டில் தனியாக வசிக்கும் ராசு, சில தினங்களுக்கு முன்பு அடுப்பில் சமையல் செய்தபோது, ஆடையில் தீப்பற்றி காயமடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT