விழுப்புரம்

சாராய ஒழிப்பு விழிப்புணா்வு

25th Nov 2021 11:36 PM

ADVERTISEMENT

செஞ்சி பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்டக் காவல் துறை, செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியவை சாா்பில் சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் ராதிகா, காவல் உதவி ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாராயம், போதைப் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள், உயிா், உடைமை இழப்பு குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் குடியால் ஏற்படும் அவலங்கள் குறித்து விளக்கி நாடகம் நடைபெற்றது. சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

Tags :  செஞ்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT