விழுப்புரம்

நாட்டுத் துப்பாக்கியுடன் இருவா் கைது

10th Nov 2021 09:01 AM

ADVERTISEMENT

திண்டிவனம் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வானூா் பகுதியில் காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

விசாரணையில், வானூா் அடுத்த எறையூரைச் சோ்ந்த சந்துரு மகன் உதயக்குமாா்(28), கொடுக்கூரைச் சோ்ந்த ரமேஷ் (35) ஆகியோா் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் வானூா் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT