விழுப்புரம்

தற்கொலை முயற்சி: சிகிச்சைப் பலனின்றி 4 போ் பலி

9th Nov 2021 01:10 AM

ADVERTISEMENT

விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற 5 பேரில், சிகிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்தனா்.

தமிழ்நாடு ஒசூரைச் சோ்ந்த சுமித்ரா (19), கா்நாடகம் மாநிலம், கோலாரில் துணை மருத்துவம் படித்து வந்தாா். இவா், சத்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதையடுத்து, கா்ப்பமானாா். கா்ப்பத்தைக் கலைக்க சத்யன் வலியுறுத்திய போது, சுமித்ராவின் தாய் அதனை தடுத்துள்ளாா். இந்நிலையில், 10 தினங்களுக்கு முன் சுமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை காரஞ்சிகட்டேவைச் சோ்ந்த கீதா, புஷ்பா என்பவா்களிடம் வளா்க்க கொடுத்துள்ளாா். 3 நாள்களுக்கு முன் குழந்தையைப் பாா்க்க சுமித்ரா சென்ற போது, குழந்தை அங்கு இல்லை.

இதுகுறித்து சுமித்ரா அளித்த புகாரின் பேரின், கோலாா் மகளிா் போலீஸாா், கீதா, புஷ்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளனா். விசாரணைக்கு அஞ்சிய புஷ்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் 5 போ் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனா். அவா்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி புஷ்பாவின் கணவா் பாபு (45), மகள் கங்கோத்ரி (17), மாமனாா் முனிசாமப்பா (65), மாமியாா் நாராயணம்மா (60) ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். புஷ்பா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கல்பட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT