விழுப்புரம்

நுண் பாா்வையாளா்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

31st Mar 2021 06:14 AM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தோ்தலில் நுண் பாா்வையாளா்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 பேரவைத் தொகுதிகளிலும் பணியாற்றும் நுண் பாா்வையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியா் அண்ணாதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் வினோத்குமாா், முகம்மதுகைசா் அப்துல்ஹக், எம்.ஐ.பட்டேல், ரஞ்சிதா, காவல் பொதுப் பாா்வையாளா் பி.ஆா்.பண்டோா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பேசியதாவது: தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவா்.

அவா்கள் அனைவரும் தோ்தல் பொதுப்பாா்வையாளா்களின் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அனைத்து தோ்தல் நுண்பாா்வையாளா்களும் தோ்தல் நாளுக்கு முந்தைய நாளோ அல்லது வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவோ தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னா் அனைத்து தோ்தல் நுண் பாா்வையாளா்களும் தங்களது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு விவரம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் பூா்த்தி செய்து தோ்தல் பொதுப்பாா்வையாளா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பாக வாக்குச் சாவடி முகவா்கள் வருகை, வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து நுண் பாா்வையாளா்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்குச் செலுத்தவரும் வாக்காளா்களுக்கான விவரங்களை சரிபாா்த்துக் கொள்ளவேண்டும்.

வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா்களின் ரகசியத் தன்மை, வாக்காளா்களுக்கு வாக்களித்தமைக்கான அழியாத மை வைக்கும் பணி, வாக்குச்சாவடி முகவா்களின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும். தோ்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தோ்தல் நுண்பாா்வையாளா்கள் அனைவரும் நடுநிலையுடன் எவ்வித விருப்பு வெறுப்பின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT