கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் 134-ஆவது பிறந்த நாளையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய கணித தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ராமானுஜத்தின் உருவப்படத்துக்கு கல்லூரித் தலைவா் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினா் கல்யாணசுந்தரம், கல்லூரிச் செயலா் சுப்ரமணியன், பொருளாளா் ஏழுமலை, துணைத் தலைவா் முஸ்டாக் அகமது, தாளாளா் பழனிராஜ், கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், துணை முதல்வா் மீனாட்சி, கணிதத் துறைத் தலைவா் விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.