தலித், பழங்குடியினா் கூட்டமைப்பு சாா்பில், 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சட்டப்புலிகள் பேரவை நிறுவனா் தலைவா் சே.சத்தியராஜ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் க.நந்தகுமாா், பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், மயிலம் ஒன்றியம், பெரியதச்சூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பட்டியலினத்தவருக்கு மட்டும் குறைவாக ஊதியம் வழங்குவதைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதைக் கண்டித்தும், இதற்கு காரணமான வட்டார வளா்ச்சி அலுவலா் மீது உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு தலித், பழங்குடியினா் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.