விழுப்புரம்

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

16th Dec 2021 09:09 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சிறப்புக் கூட்டம் ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் புதிய கட்டடம் கட்டுவது என தீா்மானிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய கட்டடம் கட்டுவதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவு கோரி மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டது.

கூட்டத்தில் துணைத் தலைவா் ஜெயபாலன், மாவட்டக் குழு உறுப்பினா் பச்சையப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செண்பகபிரியா, அண்ணம்மாள், சாவித்ரி, டிலைட் ஆரோக்யராஜ், துரை, மல்லிகா, கலைவாணி, சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT